நஸ்ரல்லா கதை முடித்தது இப்படி தான்; ஷாக் வீடியோ | hassan nasrallah funeral | israel vs hezbollah
நஸ்ரல்லா தலை சிதறியது எப்படி? இஸ்ரேல் வெளியிட்ட திடுக் வீடியோ 5 மாதம் காத்திருந்து ரிலீஸ் செய்தது ஏன் லெபனானில் ஹெஸ்புலாவுக்கு எதிராக நடந்த போரில், அதன் உச்ச தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி கொன்றது. செப்டம்பரில் கொல்லப்பட அவரது சடலத்தை தற்காலிகமாக புதைத்த ஹெஸ்புலா, அவரது சவப்பெட்டியை தோண்டி எடுத்து ஞாயிற்றுக்கிழமை முறைப்படி இறுதிச்சடங்கு நடத்தியது. தெற்கு பெய்ரூட் ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடந்த இறுதிச்சடங்கில் உலகம் முழுதும் இருந்து பல ஆயிரம் ஷியா முஸ்லிம்கள் பங்கேற்றனர். இந்த பரபரப்புக்கு நடுவே ஹெஸ்புலாவை கடுப்பேற்றும் வகையில் முக்கிய வீடியோ ஒன்றை இஸ்ரேல் வெளியிட்டது. தெற்கு பெய்ரூட்டில் பதுங்கி இருந்த நஸ்ரல்லாவை இப்படி தான் குண்டு வீசி கொன்றோம் என்று கூறி, சம்பவத்தின் போது எடுத்த வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டு அதிர வைத்தது. Breath இன்னும் சில அதிர்ச்சி சம்பவங்களும் நடந்தன. நஸ்ரல்லா இறுதிச்சடங்கை பிரமாண்டமாக நடத்தி கெத்து காட்டிய ஹெஸ்புலா, தாங்கள் இன்னும் முழு பலத்துடன் இருப்பதை உலகுக்கு உணர்த்துவதாக அறிவித்தது. பதிலுக்கு கெத்து காட்டிய இஸ்ரேல், நஸ்ரல்லா இறுதிச்சடங்கு நடந்த இடத்துக்கே தங்கள் போர் விமானங்களை அனுப்பியது. நஸ்ரல்லா ஆதரவாளர்கள் பல ஆயிரம் பேர் திரண்டு இருந்த ஸ்டேடியம் மேல் மிக தாழ்வாக இஸ்ரேல் போர் விமானங்கள் பறந்து திடுக்கிட வைத்தன. ஆயிரம் இருந்தாலும் உங்களை தோற்கடித்து விட்டோம். என்றும் எங்களுக்கு கீழ் தான் நீங்கள் என்று இதன் மூலம் ஹெஸ்புலாவுக்கு செய்தி அனுப்பியதாக இஸ்ரேல் சொன்னது.