/ தினமலர் டிவி
/ அரசியல்
/ FIR டவுன்லோட் செய்த 14 பேர்? நீதிபதிகள் சரமாரி கேள்வி | High Court | Anna University Case
FIR டவுன்லோட் செய்த 14 பேர்? நீதிபதிகள் சரமாரி கேள்வி | High Court | Anna University Case
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரம் மாநிலத்தை உலுக்கி உள்ளது. சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இன்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை குறித்த அறிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர். தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. கோர்ட்டின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக உள்ளோம். அனைத்து எப்ஐஆர்களும் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. போக்சோ, பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான வழக்கு விவரங்கள் தானாகவே லாக் ஆகி விடும்.
டிச 28, 2024