ராஜா தண்டனை நிறுத்தம்: கோர்ட் அளித்த தீர்ப்பு விவரம் | H Raja | bjp | Kanimozhi
பாஜ மூத்த தலைவர் ஹெச்.ராஜா 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈவெரா சிலையை உடைப்பேன் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்ததாகவும், 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் திமுக எம்.பி. கனிமொழியை விமர்சித்து எக்ஸ் தளத்தில் கருத்துக்களைப் பதிவிட்டிருந்ததாகவும், ஈரோடு நகர காவல்துறை, மற்றும் கருங்கல்பாளையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை, எம்.பி. - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் விசாரித்தார். விசாரணையின்போது, ஈவெரா சிலையை தான் உடைப்பேன் என்று பேசியதற்கு ஆதாரங்கள் இல்லை எனவும், திமுக எம்.பி. கனிமொழி குறித்த கருத்து அரசியல் ரீதியானது எனவும், ஹெச். ராஜா தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.