/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வக்பு சீர்திருத்தம் கட்டாயம் என்கிறார் அஜ்மீர் தர்கா தலைவர் | Ajmer Dargah | Waqf Amendment bill
வக்பு சீர்திருத்தம் கட்டாயம் என்கிறார் அஜ்மீர் தர்கா தலைவர் | Ajmer Dargah | Waqf Amendment bill
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த மசோதா, வக்பு நிர்வாகத்தில் நீண்ட காலமாக நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக உள்ளது என அஜ்மீர் தர்கா ஷெரீப் அறக்கட்டளை தலைவர் ஹாஜி சையத் சல்மான் கூறினார். வக்பு வாரிய சீர்திருத்தம் என்பது காலத்தின் கட்டாயம். வக்பு வாரியம் தற்போது தவறான நிர்வாகம், வெளிப்படையற்ற தன்மை, திறனற்ற செயல்பாடுகளால் முடங்கியுள்ளது. நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய நில உரிமையாளராக வக்பு வாரியம் உள்ளது. வக்பு வாரியம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், பள்ளிகள், மருத்துவமனைகள், நுாலகங்கள் போன்றவற்றை உருவாக்கி இஸ்லாமியர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதே.
மார் 31, 2025