உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்தியருக்கு அவமதிப்பு: டிரம்பிடம் பேசாத பிரதமர் மோடி | US white house | illegal immigrant

இந்தியருக்கு அவமதிப்பு: டிரம்பிடம் பேசாத பிரதமர் மோடி | US white house | illegal immigrant

Donkey Routeல வந்தா இதான் கதி அமெரிக்கா மீண்டும் அதிரடி வெள்ளை மாளிகை பரபரப்பு வீடியோ அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் டொனால்ட் டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் கண்டுபிடித்து நாடு கடத்தும் வேலையை முடுக்கி விட்டுள்ளார். அந்த வகையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 332 இந்தியர்கள் இம்மாத துவக்கத்தில் ராணுவ விமானங்களில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் வந்திறங்கிய அவர்கள், அமெரிக்க அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை சுமத்தினர். கைவிலங்கு, காலில் சங்கிலி என எங்களை மிகவும் அவமதித்து விட்டார்கள். சாப்பாடுபோடவில்லை. பாத்ரூமை யூஸ் பண்ணக்கூட அனுமதிக்கவில்லை.. இந்த மனித உரிமை மீறலை கேட்க ஆளில்லையா? என அவர்கள் கூறினர். இந்த விவகாரம் இந்தியாவில் அரசியல் பிரச்னையாக மாறியது. பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி, பார்லிமென்ட்டை எதிர்க்கட்சிகள் முடக்கின. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார். அமெரிக்க நாட்டின் சட்ட திட்டங்களின்படிதான் அனைவரும் நாடு கடத்தப்படுகின்றனர் என கூறினார். இந்நிலையில், வெள்ளை மாளிகை ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. சட்டவிரோதமாக குடியேறிய அந்நியர்களை நாடு கடத்தும் விமானம் என்ற கேப்ஷனுடன் வெளியிடப்பட்ட அந்த வீடியோ 41 வினாடிகள் ஓடுகின்றன. சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இப்படித்தான் திருப்பி அனுப்புவோம்; இதான் அமெரிக்கா என அடித்துச் சொல்லும் விதமாக வீடியோ உள்ளது. நாடு கடத்தப்படும் ஒரு வெளிநாட்டவரை அமெரிக்க அதிகாரி ஒருவர், ராணுவ விமானத்தில் ஏற்ற தயார்படுத்தும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. ஒரு கூடையில் நிறைய கைவிலங்குகள் மற்றும் கால் சங்கிலிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் இருந்து சில சங்கிலிகளை அந்த அதிகாரி எடுக்கிறார். நாடு கடத்தப்படும் நபருக்கு அதிகாரி கைவிலங்கு போடுகிறார். கைவிலங்கு, கால்சங்கிலியுடன் ஒருவர், விமானத்தில் ஏற செல்கிறார் என்பதுபோன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை தொழிலதிபர் எலான் மஸ்க் ரீட்வீட் செய்துள்ளளர். ஹாஹா வாவ் என பதிவிட்டு வீடியோவை பாராட்டியுள்ளார். இந்த வீடியோ வலைதளங்களில் பரவத் துவங்கியதும் மீண்டும் பிரதமர் மோடியை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கை விட ஆரம்பித்து விட்டனர். கொடூரமான முறையில் இந்தியர்களை நாடு கடத்திய விவகாரத்தை பார்லிமென்ட்டில் எழுப்பினோம். அதன்பிறகு அமெரிக்காவுக்கு மோடி சென்றார். அதிபர் டிரம்ப்பை சந்தித்தார். அப்போது இந்தப் பிரச்னை பற்றி அவர் பேசவே இல்லை என்பது இப்போது தெரிந்துவிட்டது; அதனால்தான் மீண்டும் அமெரிக்கா இப்படி ஒரு வீடியோவை வெளியிடுகிறது என, காங்கிரசார் சுட்டிக்காட்டி குற்றம்சாட்டுகின்றனர்.

பிப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை