தேர்தலுக்கு முன் தமிழகம் ஸ்தம்பிக்கும்: அரசு ஊழியர்கள் சங்கம் பரபரப்பு | Old Pension Scheme
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என, 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்து, ஐந்து ஆண்டுகள் முடியவுள்ள நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இதனால், அதிருப்தி அடைந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இதையடுத்து, அரசு ஊழியர்கள் சங்கங்களிடம் பேச, கடந்த பிப்ரவரி மாதம், அமைச்சர்கள் வேலு, தென்னரசு, மகேஷ் ஆகியோர் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டது.
ஆனால், கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபட போவதாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் அறிவித்தன.
தொடர்ந்து, அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகியோர் தலைமை செயலகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினருடன் மீண்டும் பேச்சு நடத்தினர்.
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு, தலைமை செயலக ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டணி உட்பட பல அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பேச்சில் உடன்பாடு எதுவும் எட்டப்படாததால், திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என, அரசு ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
தி.மு.க., அரசு பதவியேற்ற பின், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் உண்ணாவிரதம், பேரணி, தர்ணா, தொடர் காத்திருப்பு போராட்டம் என, 72 போராட்டங்களை நடத்தியுள்ளோம்.
இருப்பினும், தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த, முதல்வர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.