உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பயங்கரவாத ஆதரவை கைவிடும் வரை பாகிஸ்தானுக்கு நீர் இல்லை!

பயங்கரவாத ஆதரவை கைவிடும் வரை பாகிஸ்தானுக்கு நீர் இல்லை!

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலை கண்டித்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்தியா, ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும் அந்நாட்டுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதில் ஒன்றாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதனால் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி உள்ளார். பாகிஸ்தான் எப்போதும் அமைதியை விரும்பும் நாடு. அமைதியாக இருப்பதை பலவீனமாக யாரும் நினைக்க வேண்டாம். பாகிஸ்தானுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைக்கும் பலமாக பதிலடி கொடுக்கப்படும். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை சட்ட விரோதமாக ரத்து செய்ததன் மூலம் இந்தியா, எங்கள் அமைதியை கெடுக்கும் எதிரியாக உள்ளது. பாகிஸ்தானுக்கு சொந்தமான நீரை பெற எங்களுக்கு முழு உரிமை உள்ளது. நதி நீர் விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. #Indus_water_treaty #pakistan_PM #MEAresponse #pahalgham_Attack ##Randhir_Jaiswal #Ministry_of_external_affairs #Shebaz_sheriff #INDvsPAK #Indiastand #Pakthreat #OperationSindoor #Politicalnews #Internationalnews #Currentaffairs #Breakingnews

ஆக 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி