உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமெரிக்கா படைகளை குறிவைத்து அடிக்கும் ஈரான் | Iran launches missiles | American terrorist forces

அமெரிக்கா படைகளை குறிவைத்து அடிக்கும் ஈரான் | Iran launches missiles | American terrorist forces

கத்தார் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியது ஈரான்! அமெரிக்க ஆபரேஷனுக்கு பதிலடி பெஷரத் ஃபடா இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈரானை தாக்கி உள்ள நிலையில் ஈரான் அதற்கு பதிலடி தந்து வருகிறது. சனியன்று, ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்களை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கின. ஈரான் சமாதானத்துக்கு வராவிட்டால் தாக்குதல் கடுமையாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து இருந்தார். இதற்கு பதிலளித்த ஈரானின் உச்ச தலைவர் கமேனி அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் அழிவு காத்திருக்கிறது என்றார். இச்சூழலில், ஆபரேஷன் பெஷாரத் ஃபடா Operation Besharat Fatah பெயரில் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து 6 ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தி இருக்கிறது. அமெரிக்காவை நேரடியாக தாக்க முடியாத ஈரான், அந்த நாட்டுக்கு நெருக்கமாக இருக்கும் கத்தார் மீது தாக்குதல் தொடுத்துள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் அமைந்துள்ள அல் உதெய்த் விமான தளத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. அங்குதான் சுமார் 10,000 துருப்புகளை அமெரிக்கா நிலை நிறுத்தி இருக்கிறது. இது, மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க ராணுவ நிலை. அந்த பிராந்தியம் முழுவதுமான ராணுவ நடவடிக்கைகளுக்கு இது முக்கியமான மையமாக செயல்படுகிறது. ஈரான் ஏவுகணைகளை அமெரிக்காவின் பேட்ரியாட் தடுப்பு ஏவுகணைகள் வழிமறித்து முறியடித்து வருகின்றன. சேதங்கள் பற்றிய தகவல்கள் வெளியகவில்லை. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, கத்தார் மற்றும் சவுதி அரேபியா தனது வான்வெளியை மூடியது. பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் அலுவலகங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டன.

ஜூன் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை