ஹமாஸ் தலைவனை இஸ்ரேல் போட்டுத்தள்ளிய பின்னணி | Israel vs Hamas | Hezbollah | Mohammed Shahine | IDF
போர் நிறுத்தத்துக்கு நடுவே பரபரப்பு ஹமாஸ் லீடர் கதை முடித்த இஸ்ரேல்! ஸ்கெட்ச் போட்டது எப்படி? வெளியானது பகீர் தகவல் ஹமாஸ், ஹெஸ்புலாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு இருக்கும் இஸ்ரேல், இப்போது ஹமாசின் முக்கிய தலைவரை தீர்த்துக்கட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படி என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். 2023 அக்டோபர் மாதம் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதல் போருக்கு வித்திட்டது. ஹமாசுக்கு பதிலடி கொடுக்க காசாவுக்குள் புகுந்து போரை ஆரம்பித்தது இஸ்ரேல். ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேலை ஹெஸ்புலா பயங்கரவாதிகள் தாக்கினர். இதனால் அவர்களுக்கு எதிராகவும் இஸ்ரேல் போரில் குதித்தது. ஒரே நேரத்தில் காசாவிலும் லெபனானிலும் புகுந்து ஹமாஸ், ஹெஸ்புலா கட்டமைப்புகளை தவிடுபொடியாக்கியது. இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதலில் காசாவில் 47 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். லெபனானில் 3500 பேர் இறந்தனர். தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹமாஸ், ஹெஸ்புலா வழிக்கு வந்தன. இரு போர்களும் அடுத்தடுத்து முடிவுக்கு வந்தன. முதலில் இஸ்ரேல்-ஹெஸ்புலா இடையே நவம்பர் மாதம் போர் நிறுத்தம் வந்தது. லெபனானில் ஓடும் லிட்டானியா நதிக்கு தெற்கே இனி ஹெஸ்புலா வரக்கூடாது; அதே போல் தெற்கு லெபனானை விட்டு 2 மாதத்துக்குள் இஸ்ரேல் ராணுவம் வெளியேற வேண்டும். இது தான் போர் ஒப்பந்தம். ஆனால் ஹெஸ்புலா விட்டு சென்ற ஆயுதங்களை அழிக்க வேண்டி இருப்பதால், லெபனானை விட்டு வெளியேற பிப்ரவரி 18 வரை அவகாசம் கேட்டு வாங்கியது இஸ்ரேல். அதாவது, நாளை முற்றிலும் இஸ்ரேல் படைகள் லெபனானை விட்டு வெளியேறி விட வேண்டும். இந்த நிலையில் தான் மிகப்பெரிய சம்பவத்தை லெபனானில் செய்திருக்கிறது இஸ்ரேல் ராணுவம். அதாவது, லெபனானில் கடலோர சிட்டியான சிடோன் என்ற நகரில் இன்று காலை திடீரென இஸ்ரேல் ட்ரோன் புகுந்து சரமாரியாக குண்டு வீசியது. இந்த துல்லிய தாக்குதலில் லெபனானுக்கான ஹமாஸ் ஆப்பரேஷன் தலைவன் முகமது ஷாஹின் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்பான ஷின் பெட் கொடுத்த ரகசிய தகவலை அடுத்து இந்த தாக்குதலை இஸ்ரேல் விமானப்படை நடத்தியது. காரில் சென்று கொண்டிருந்த முகமது ஷாஹினை குறி வைத்து தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. லெபனான் ராணுவம் கொல்லப்பட்ட ஷாஹின் உடலை கைப்பற்றி விசாரிக்கிறது. இவன் சாதாரண ஆள் கிடையாது. லெபனானில் இருக்கும் ஹமாஸ் டீமை வழி நடத்தியவன். அந்நாட்டுக்கான ஹமாஸ் தலைவனாகவும் இருந்தான். அங்கிருந்தபடி இஸ்ரேலுக்கு எதிராக நிறைய பயங்கரவாத தாக்குதலை நடத்தி வந்தான். குறிப்பாக வடக்கு இஸ்ரேலில் உள்ள வீடுகள் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசி வந்தான். இஸ்ரேலுக்கு எதிராக பயங்கர தாக்குதலை நடத்த இப்போது சதி திட்டம் போட்டு இருந்தான். எனவே தான் அவனை தீர்த்துக்கட்டினோம் என்று இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. ஏற்கனவே ஹெஸ்புலாவின் உச்ச தலைவன் நஸ்ரல்லா, ஹமாசின் உச்ச தலைவன் இஸ்மாயில் ஹனியே, அடுத்து வந்த ஹமாஸ் உச்ச தலைவன் யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் கொலை செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.