பயமா? இஸ்ரேல் சமாதான கொடி... யாரும் எதிர்பார்க்காத திருப்பம் |Israel vs Hezbollah | Israel war end?
போர் முடிஞ்சுது இஸ்ரேல் பின்வாங்கியது ஏன்? ஹமாஸ்-ஹெஸ்புலாவே ஷாக் காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் போரை துவங்கியது. அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய கொடூர தாக்குதல் தான் போருக்கு முக்கிய காரணம். அன்று நடந்த குண்டு வீச்சு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 1200 இஸ்ரேலியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 251 இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்து சென்றனர். இதற்கு பதிலடி கொடுக்க காசாவில் இஸ்ரேல் துவங்கிய போர் தான் ஓராண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை காசாவில் 42 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காசாவில் உள்ள வீடுகளை காலி செய்து இடம்பெயர்ந்து விட்டனர். உச்சக்கட்டமாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹனியேவை ஈரானில் வைத்து இஸ்ரேல் போட்டுத்தள்ளியது. இருப்பினும் போர் முடிவுக்கு வரவில்லை.