உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஏமனில் புகுந்து இஸ்ரேல் நடத்திய பெரிய அட்டாக் | israel vs houthi | israel attacks sanna | Yemen

ஏமனில் புகுந்து இஸ்ரேல் நடத்திய பெரிய அட்டாக் | israel vs houthi | israel attacks sanna | Yemen

சனாவில் புகுந்து அடித்த இஸ்ரேல் ஏமனின் நம்பர்-1 ஏர்போர்ட் டமால் மீண்டும் 2000 கிமீ பறந்து தாக்கிய பகீர் பின்னணி ஜனவரியில் அமலுக்கு வந்த இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம் அடுத்த 60 நாளில் முடிவுக்கு வந்தது. ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்கள் வசம் இருக்கும் பிணைக்கைதிகளை ஒரே நேரத்தில் விடுவிக்க மறுத்ததால் மீண்டும் போரை துவங்கியது இஸ்ரேல். இதற்கு முன்பு நடந்த சண்டையை போல் இல்லாமல், ஹமாசை அடித்து விரட்டி விட்டு மொத்த காசாவையும் கைப்பற்றும் நோக்குடன் தீவிர போரில் இஸ்ரேல் குதித்து இருக்கிறது. இன்னொரு பக்கம், 2000 கிலோ மீட்டருக்கு அப்பால் ஏமனில் இருந்து கொண்டு ஹமாசுக்கு ஆதரவாக ஹவுதி பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது குண்டு வீசி வருகின்றனர். கடந்த மாதம் ஹவுதி வீசிய ஏவுகணை இஸ்ரேலின் ஏர்போர்ட் மீது விழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 7 மடங்கு பதிலடி கொடுப்போம் என்றார். அன்று முதல் தொடர்ந்து ஹவுதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 8 முறை ஏமனுக்கு போர் விமானங்களை அனுப்பி ஹவுதி முகாம்களை தகர்த்து விட்டது. கடைசியாக மே 16ம் தேதி ஏமனில் உள்ள 2 முக்கிய துறைமுகங்களை குண்டு வீசி தாக்கியது. அதன் பிறகும் ஹவுதிகள் கொட்டம் அடங்கவில்லை. தினமும் ட்ரோன் அல்லது ஏவுகணையை வீசி இஸ்ரேலை தாக்கியது. கடைசி 10 நாளில் ட்ரோன்கள் மற்றும் 7 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசியது. இதை இஸ்ரேலின் அயன்டோம் வானிலேயே இடைமறித்து அழித்தது. ஹவுதிக்கு பதிலடி கொடுக்க இன்று மீண்டும் இஸ்ரேல் போர் விமானங்கள் ஏமன் நோக்கி பறந்தன. போர் விமானங்கள், உளவு விமானங்கள், எரிபொருள் நிரப்பும் விமானங்கள் என 20க்கும் மேற்பட்ட விமானங்கள், 2000 கிலோ மீட்டர் தாண்டி ஏமன் சென்று தாக்குதலை துவங்கின. இந்த முறை ஏமன் தலைநகரின் பிரதான விமான நிலையமான சனா ஏர்போர்ட் மீது சரமாரியாக குண்டு வீசியது. சானா ஏர்போர்ட்டின் கட்டுமானங்கள், விமானங்கள் நொறுக்கப்பட்டன. குறிப்பாக ஹவுதி பயங்கரவாதிகள் பயன்படுத்தி வந்த விமானங்களை அழித்ததாக இஸ்ரேல் சொன்னது. ‛சனா ஏர்போர்ட்டை ஹவுதி பயங்கரவாதிகள் தான் பயன்படுத்தி வருகின்றனர். எனவே தான் அங்கு குண்டு வீசினோம். பயங்கரவாதிகள் பயன்படுத்தும் விமானங்களை அழித்தோம். ஹவுதிகளுக்கு பின்னால் ஈரான் உள்ளது. இஸ்ரேலை ஒரு முறை தாக்கினால், 7 முறை பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் ராணுவ அமைச்சர் காட்ஸ் சொன்னார்.

மே 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !