உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இஸ்ரேல் ஷாக்... ஈரான் பதிலடி திட்டத்தில் மெகா ஓட்டை Israel vs Iran | israel vs hezbollah | Pentagon

இஸ்ரேல் ஷாக்... ஈரான் பதிலடி திட்டத்தில் மெகா ஓட்டை Israel vs Iran | israel vs hezbollah | Pentagon

ஈரானுக்கு பதிலடி எப்போது? இஸ்ரேல் திட்டத்தில் ஓட்டை! கோட்டை விட்டது அமெரிக்கா காசாவில் உள்ள ஹமாசுக்கு எதிராக ஓராண்டு முன்பு போரை துவங்கிய இஸ்ரேல் இப்போது ஹெஸ்புலாவுக்கு எதிராகவும் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பின் உச்ச தலைவன் ஹனியேவை ஏற்கனவே கொலை செய்த இஸ்ரேல், புதிய தலைவனாக நியமிக்கப்பட்ட யாஹ்யா சின்வாரையும் சில நாட்கள் முன்பு தீர்த்துக்கட்டியது. ஹெஸ்புலாவின் உச்ச தலைவன் ஹசன் நஸ்ரல்லாவையும் சமீபத்தில் கொன்றது. இப்படி முக்கிய தலைவர்களை குறி வைத்து இஸ்ரேல் கொலை செய்யும் படலம், ஹமாஸ், ஹெஸ்புலாவை வளர்க்கும் ஈரானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்றதற்கு அக்டோபர் 1ம் தேதி ஈரான் பதிலடி கொடுத்தது. சரமாரியாக இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்தது. ஒரே நேரத்தில் சக்தி வாய்ந்த 180 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது. பல ஏவுகணைகளை தங்கள் வான்வெளி பாதுகாப்பு கருவிகள் இடைமறித்து அழித்து விட்டதாக இஸ்ரேல் சொன்னது. இருப்பினும் சில ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கின. குறிப்பாக இஸ்ரேலின் மிகப்பெரிய விமானப்படை தளங்களில் ஒன்றான நேவாடிம் (Nevatim) விமானப்படை தளம் சேதம் அடைந்தது. இது தவிர இஸ்ரேலியர் ஒருவரும், பாலஸ்தீனியர் ஒருவரும் கொல்லப்பட்டனர். சிலர் காயம் அடைந்தனர். ஈரானின் இந்த திடீர் தாக்குதல் இஸ்ரேலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அந்த நாட்டுக்கு ஏற்பட்ட பின்னடைவாகவும் பார்க்கப்பட்டது. இதனால் இஸ்ரேல் பொங்கி எழுந்தது. இஸ்ரேல் மீது கை வைத்து ஈரான் பெரிய தப்பு செய்து விட்டது. மிகப்பெரிய பதிலடியை ஈரான் வாங்கியே தீரும் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்தார்.

அக் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை