உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தமிழகத்தை உலுக்கும் ஜகபர் அலி சம்பவம்-பகீர் பின்னணி Jagaber Ali | Thirumayam Case | Annamalai vs DMK

தமிழகத்தை உலுக்கும் ஜகபர் அலி சம்பவம்-பகீர் பின்னணி Jagaber Ali | Thirumayam Case | Annamalai vs DMK

லாரி ஏற்றி கதை முடித்த கொடூரம் ஜகபர் அலி மரணத்தில் பகீர் தமிழகமே நடுங்கும் மாஃபியா வெறியாட்டம் கனிம கொள்ளைக்கு எதிராக போராடிய ஆர்வலர் ஜகபர் அலியை குவாரி அதிபர்கள் சேர்ந்து லாரி ஏற்றி கொடூரமாக கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே நடுங்க வைத்துள்ளது. பல்கலை மாணவி சம்பவம் போல், இந்த விவகாரமும் திமுக அரசுக்கு எதிராக புயலை கிளப்பி இருக்கிறது. அண்ணாமலை, பழனிசாமி என்று அடுத்தடுத்து தலைவர்கள் வரிந்து கட்டி அரசை கடுமையாக தாக்கி வருகின்றனர். ஜகபர் அலி கொலையின் பின்னணி என்ன? உண்மையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூரை சேர்ந்தவர் ஜகபர் அலி வயது 58. இவர் அதிமுக திருமயம் தெற்கு ஒன்றிய அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளராக இருந்தார். மாவட்ட அமைச்சூர் கபடி கழக தலைவராகவும் இருந்தார். படிப்பு காரணத்துக்காக மனைவியும் குழந்தைகளும் 6 மாதமாக காரைக்குடியில் வசித்து வந்தனர். காட்டுபாவா பள்ளிவாசல் அருகே ஜகபர் அலி மட்டும் தனியாக வசித்தார். ஹாலோ பிளாக் பேக்டரி நடத்தி வந்த ஜகபர் அலி, சுற்றுவட்டார பகுதியில் நடக்கும் கனிம கொள்ளைக்கு எதிராக தீவிரமாக போராடி வந்தார்.

ஜன 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை