நெல்லை எஸ்.ஐ கொலை சம்பவம்: எதிர்கட்சிகள் நெருக்கடி | Jahir hussain case | Nellai | CM Stalin | TN
நெல்லை ஜாகிர் உசேன் வீடியோ ஸ்டாலின் கொடுத்த ரிப்ளை சட்டசபையில் பரபரப்பு திருநெல்வேலியை சேர்ந்த ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன், நேற்று காலை தொழுகை முடிந்து வீடு திரும்பும் வழியில் காட்சி மண்டபம் அருகே 4 பேர் கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நெல்லையை உலுக்கிய இந்த கொலை சம்பவத்திற்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உட்பட எதிர்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மாநில அரசின் சட்டம் ஒழுங்கை கடுமையாக விமர்சித்தனர். பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், ஜாகிர் உசேன் கொலை சம்பவம் தொடர்பாக எதிர்கட்சி சார்பில் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானம் மீது எதிர்கட்சி உறுப்பினர்கள் பலரும் பேசினர். சம்பவத்தை கண்டித்து தங்கள் கருத்துகளை தெரிவித்ததால் சபையில் பரபரப்பு நிலவியது. கடைசியில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.