உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமைச்சர் மூர்த்தி காட்டிய பவ்யம்: மதுரையில் நடந்தது என்ன? | Jallikattu | Udhayanidhi | Inbanithi

அமைச்சர் மூர்த்தி காட்டிய பவ்யம்: மதுரையில் நடந்தது என்ன? | Jallikattu | Udhayanidhi | Inbanithi

இன்பநிதியை தயார்படுத்தும் உதயநிதி ஜல்லிக்கட்டு மேடையில் 3 சம்பவங்கள்! உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். அவருடன் போட்டியைப் பார்க்க, அவரது மகன் இன்பதி நிதியும் வந்திருந்தார். அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் துணை முதல்வர் உதயநிதிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். உதயநிதிக்கு விழாக்குழு சார்பில் பொன்னடை போர்த்தியபோது இன்பதிநிதிக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார் அமைச்சர் மூர்த்தி. உதயநிதியும், இன்பதிதியும் அருகேருகே அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்தனர். இன்பதிநிதியுடன் அவரது நெருங்கிய நண்பர்கள் 4 பேரும் வந்திருந்தனர். அவர்களும் மேடையில் உதயநிதி, இன்பநிதி அருகே அமர்ந்து போட்டியை கண்டு ரசித்தனர். போட்டியின்போது சிறந்த மாடுபிடி வீரர், காளைகளுக்கு தங்காசுகளை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். விழா குழுவினர் அவரது மகன் இன்பநிதியிடமும் தங்க நாணயத்தைக் கொடுத்து பரிசு கொடுக்க வைத்தனர். சுமார் இரண்டரை மணி நேரம் ஜல்லிக்கட்டு போட்டிகளை ரசித்த இருவரும் பின்னர் அங்கிருந்து கிளம்பினர். திமுக நிர்வாகிகள் மட்டுமில்லாது அரசு அதிகாரிகளும் இன்பநிதியிடம் பவ்யமாக நடந்து கொண்டனர்.

ஜன 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை