/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பரபரப்பை கிளப்பிய அமெரிக்க துணை அதிபரின் பதில் | J.D.Vance | US Vice president | President Trump
பரபரப்பை கிளப்பிய அமெரிக்க துணை அதிபரின் பதில் | J.D.Vance | US Vice president | President Trump
79 வயதாகும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் மிகவும் வயதான அதிபராக பதவியில் இருக்கிறார். அதேநேரம் 41 வயதான துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அமெரிக்க வரலாற்றில் 3வது இளைய துணை அதிபர் என்ற இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில், நாடு ஒரு பயங்கரமான சோகத்தை எதிர்கொள்ள நேர்ந்தால், அமெரிக்காவின் தலைமை பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாக ஜேடி வான்ஸ் கூறி இருப்பது பேசு பொருளாகி உள்ளது. அதிபர் டிரம்ப் உடல்நிலை பற்றி எழும் பல்வேறு யூகங்களுக்கு மத்தியில் தான் அவரின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.
ஆக 29, 2025