உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / என்றும் நன்றியோடு இருப்பேன்: மோடி நெகிழ்ச்சி | PM Narendra Modi US | Joe biden hands 297 indian an

என்றும் நன்றியோடு இருப்பேன்: மோடி நெகிழ்ச்சி | PM Narendra Modi US | Joe biden hands 297 indian an

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 297 இந்திய கலை பொருட்கள் மோடியிடம் ஒப்படைத்த பைடன் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் க்வாட் கூட்டமைப்பின் 4-ஆவது உச்சிமாநாடு அமெரிக்காவில் நடந்தது. இதில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை அவரது இல்லத்தில் சந்தித்தார். சந்திப்பின் போது இருவரும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன்பின், இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்களை அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார். இந்த பண்பாட்டு பொக்கிஷங்கள் 4000 ஆண்டுகள் பழமையானவை. கி.மு. 2000 - கி.பி. 1900 இடையிலான காலக்கட்டத்தில் இந்தியவின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டவை. பெரும்பாலான கலைப் பொருள்கள் சுடுமண்ணால் செய்யப்பட்ட கிழக்கு இந்தியாவை சேர்ந்தவை. பிற பொருள்கள் கல், மரம், உலோகம் மற்றும் தந்தத்தால் உருவாக்கப்பட்டவை. இந்த 297 விலைமதிப்பற்ற பழங்கால பொருள்களை திருப்பிக் கொடுப்பதை உறுதிசெய்த அதிபர் ஜோ பைடன் மற்றும் அமெரிக்க அரசுக்கு நான் என்னென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை