உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சேகர்பாபு விரதம் இருப்பது சந்தோஷம்: காடேஸ்வரா சுப்ரமணியம்! | Muruga Bakthar Maanadu | Madurai

சேகர்பாபு விரதம் இருப்பது சந்தோஷம்: காடேஸ்வரா சுப்ரமணியம்! | Muruga Bakthar Maanadu | Madurai

முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடைபெறக்கூடாது என அமைச்சர் சேகர்பாபு, விரதம் இருப்பது சந்தோஷமாக உள்ளது என ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் அவர் அளித்த பேட்டி: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் பாதயாத்திரை குழுக்களையும், விளம்பர வாகனத்தையும் போலீசார் தடுக்கின்றனர். தொடர்ந்து செல்லக்கூடாது என மிரட்டுகின்றனர். தமிழக அரசு சார்பில், முருகனுக்கு பழனியில் மாநாடு நடத்தினர். அது முழுக்க முழுக்க அரசியல் மாநாடாக நடத்தப்பட்டது. ஆனால் மதுரையில் நாங்கள் நடத்தவிருக்கும் மாநாடு, அரசியல் சார்பற்ற ஆன்மிக மாநாடு. முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடக்க ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் இருவரும் விரதம் இருந்து வருகின்றனர். ஆனால், முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடக்கக்கூடாது என அமைச்சர் சேகர்பாபு, அதே முருகக் கடவுளிடம் வேண்டி விரதம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அது ரொம்பவும் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. திமுகவும், அதன் கூட்டணியில் உள்ளவர்களும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். இருந்தாலும், அவர்களும் மாநாட்டுக்கு வர வேண்டும் என்பதற்காகவே, அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு ஆகியோருக்கு அழைப்பிதழ் கொடுத்துஇருக்கிறோம். முதல்வர் ஸ்டாலினுக்கும் அழைப்பிதழ் கொடுக்க நேரம் கேட்டிருக்கிறோம். அனுமதி கிடைத்தால், அவரையும் நேரில் அழைப்போம். மதுரை முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்துக்களை ஒருமைப்படுத்தும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்தக்கூடிய மாநாடாக அமையும் என்றும் காடேஸ்வரா கூறியுள்ளார்.

ஜூன் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி