உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கோபத்தில் கொந்தளித்த சித்து: பதிலடி கொடுத்த போலீஸ் அதிகாரி Karnataka CM tried to slap Police A

கோபத்தில் கொந்தளித்த சித்து: பதிலடி கொடுத்த போலீஸ் அதிகாரி Karnataka CM tried to slap Police A

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பெலகாவியில் ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமய்யா பங்கேற்றார். முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் சித்தராமய்யா பேச எழுந்த போது, கூட்டத்தில் இருந்த சிலர் பாஜவுக்கு ஆதரவாகவும், முதல்வருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். சித்தராமய்யாவுக்கு எதிராக கருப்பு கொடி காட்டினர். இதனால் கடுப்பான சித்தராமய்யா, என்ன போலீஸ் பந்தோபஸ்து ஏற்பாடு பண்ணிருக்கீங்க..? யார் இங்கே எஸ்பி என கோபமாக கேட்டார். அங்கு பாதுகாப்பு பணிகளை செய்த தார்வாடு கூடுதல் எஸ்பி நாராயண் வி பாராமணி மேடைக்கு வந்தார். போலீஸ் சீருடையில் இருந்த அவர் அருகில் வந்ததும் சித்தராமய்யா கை ஓங்கினார். அவரை அடிக்க கை ஓங்கியவர், சட்டென பின்வாங்கினார். நுாற்றுக் கணக்கானோர் கூடியிருந்த இடத்தில் போலீஸ் உயர் அதிகாரியை, முதல்வர் சித்தராமய்யா அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கர்நாடக காவல் துறையில் 31 ஆண்டுகள் பணியாற்றிய போலீஸ் அதிகாரி பாராமணி, தான் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து கடந்த மாதமே உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி விட்டதாகவும், தலைமையகத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சித்தராமய்யாவின் அராஜக செயல், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியை விருப்ப ஓய்வு பெறும் நிலைக்கு மனமுடைய வைத்து விட்டது என பாஜ தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இந்த சம்பவம் நடந்தபோதே, அந்த வீடியோவை வெளியிட்டு, ஹிட்லரும், அவுரங்கசீப்பும் உயிருடன் இல்லை என யார் சொன்னது? என கர்நாடக பாஜ தலைவர்கள் கருத்து பதிவிட்டிருந்தனர். தற்போது அந்த அதிகாரி விருப்ப ஓய்வு பெற முடிவெடுத்துள்ளது, காங்கிரஸ் கொடுங்கோல் ஆட்சிக்கு இதுவே எடுத்துக்காட்டு எனவும் பாஜ விமர்சித்துள்ளது.

ஜூலை 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை