உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சிவகுமார் - சித்தராமையா கோஷ்டி சண்டை உச்சம் karnataka Congress| Siddaramaiyah| DK Sivakumar

சிவகுமார் - சித்தராமையா கோஷ்டி சண்டை உச்சம் karnataka Congress| Siddaramaiyah| DK Sivakumar

கர்நாடகாவில் பாஜவை தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சியை பிடித்தாலும், அக்கட்சிக்குள் ஏகப்பட்ட பிரச்னைகள். வெற்றிக்கு காரணமான தமக்கு முதல்வர் பதவி வேண்டும் என, டி.கே.சிவகுமார் கொடி பிடிக்க, சித்தராமையாவை முதல்வராக்கியது காங்கிரஸ் தலைமை. இப்போதைக்கு துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொள்ளுங்கள்; ஓரிரு ஆண்டுகளுக்கு பின், சுழற்சி முறையில் நீங்கள் தான் முதல்வர் என சிவகுமாரை அப்போது சமாதானப்படுத்தியது காங்கிரஸ். ஆனாலும், பிரச்னை தீரவில்லை. சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், கர்நாடகாவின், 28 தொகுதிகளில், 9ல் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. சிவகுமாரின் சகோதரர் சுரேஷ், பெங்களூரில் பாஜவிடம் தோற்றார். இதையடுத்து சிவகுமார் --சித்தராமையா கோஷ்டி சண்டை உச்சத்தை எட்டியுள்ளது. இதை, மேலும் தீவிரமாக்கும் விதமாக, ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.

ஜூன் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை