உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காங் தொண்டனாக சாவேன்: பரமேஸ்வரா உருக்கம் | karnataka home minister | ABVB | karnataka congress

காங் தொண்டனாக சாவேன்: பரமேஸ்வரா உருக்கம் | karnataka home minister | ABVB | karnataka congress

RSS அமைப்பு யாத்திரையில் காங். அமைச்சர் பரமேஸ்வரா கர்நாடகாவில் பரபரப்பு ஆர்.எஸ்.எஸ்சுடன் இணைந்த மாணவர் அமைப்பாக ஏபிவிபி(ABVp) எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு கர்நாடகாவின் துமகூரு மாவட்டத்தில் உள்ள திப்தூரில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற ராணி அப்பாக்கா Rani Abbakka Rath Yatra நினைவை போற்றும் வகையில் ரத யாத்திரை நடத்தியது. கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா ரத யாத்திரையில் ராணி அப்பாக்கா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பான படங்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளை கடுமையாக விமர்சித்து வரும் வேளையில், ஏபிவிபி நிகழ்ச்சியில் அமைச்சர் பரமேஸ்வரா கலந்துகொண்டது சர்ச்சைக்குள்ளானது.

செப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ