உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காங் அமைச்சர் ராஜினாமா: கர்நாடக அரசியலில் பரபரப்பு | Karnataka minister | KN Rajanna

காங் அமைச்சர் ராஜினாமா: கர்நாடக அரசியலில் பரபரப்பு | Karnataka minister | KN Rajanna

லோக்சபா தேர்தல் முடிந்து ஒன்னேகால் ஆண்டு முடிந்த நிலையில், கர்நாடகாவில் நடந்த லோக்சபா தேர்தலில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் போர்க்கொடி தூக்கியுள்ளார். இது, கர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பான விவாதப்பொருளாகி இருக்கிறது. ஓட்டு திருட்டு பிரச்னையை முன்வைத்து பெங்களூருவில்,கடந்த 8ம் தேதி ராகுல் தலைமையில் போராட்டமும் நடந்தது. இந்த விவகாரத்தில், கர்நாடக கூட்டுறவுத்துறை அமைச்சரான ராஜண்ணா தான் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியையும் சித்தராமய்யா அரசையும் வெளுத்து வாங்கினார். ஓட்டு திருட்டு நடந்தது உண்மைதான். ஆனால் ஓட்டு திருட்டு நடந்தபோது யார் ஆட்சியில் இருந்தது? காங்கிரஸ் தானே. ஓட்டு திருட்டை முதலிலேயே கவனிக்காமல் கோட்டை விட்டது யார்? நாம்தானே... தேர்தல் முடிந்து ஒரு வருடம் கழித்து இப்போது பிரச்னையை கிளப்புவது வெட்கக்கேடானது. ஓட்டு திருட்டு பற்றி இப்போது பேசுபவர்கள் அப்போது என்ன செய்தார்கள்? கண்ணை மூடிக்கொண்டு இருந்தது ஏன்? எல்லா முறைகேடும் நம் கண் முன்தான் நடந்துள்ளது. இதை தடுக்காமல் மவுனமாக இருந்தது, அவமானமாக உள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் இனியாவது பாடம் கற்றுக்கொண்டு, வரும் நாட்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ராஜண்ணா கூறினார். ராஜண்ணா சித்தராமய்யாவின் ஆதரவாளர். இதனால் துணை முதல்வர் சிவகுமாரின் ஆதரவாளர்கள் பொங்கி எழுந்தனர். ஓட்டு திருட்டுக்கு எதிராக ராகுல் தீவிரமாக போராடி வரும் நிலையில், அவரை இழிவுப்படுத்தும் வகையில் ராஜண்ணா பேசியிருக்கிறார். இனியும் அவர் அமைச்சர் பதவியில் நீடிக்கக்கூடாது என கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பொங்கி எழுந்தனர். கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அமைச்சர் பதவியை ராஜண்ணா திடீரென ராஜினாமா செய்திருக்கிறார். ராஜினாமா கடிதத்தை முதல்வர் சித்தராமய்யாவிடம் ராஜண்ணா கொடுத்தார். ஏற்கன வே கர்நாடக காங்கிரசில் முதல்வர் சித்தராமய்யாவுக்கும், துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கும் பனிப்போர் நடக்கும் நிலையில், ராஜண்ணாவின் கருத்தால் கோஷ்டி சண்டை மேலும் தீவிரமாகியுள்ளது.

ஆக 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி