/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நிதி நெருக்கடியை சமாளிக்க கர்நாடக அரசு புதிய அறிவிப்பு | Karnataka | congress government
நிதி நெருக்கடியை சமாளிக்க கர்நாடக அரசு புதிய அறிவிப்பு | Karnataka | congress government
பல இலவச திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்து கர்நாடகாவில் கடந்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்றியது. பெண்களுக்கு அரசு பஸ்சில் இலவசம், ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்கு மாதம் 2000 ரூபாய் உரிமைத் தொகை போன்ற திட்டங்களை முதல்வர் சித்தராமய்யா துவங்கி வைத்தார். சொன்னதை செய்வதுதான் கர்நாடகா மாடல் என மார் தட்டினார், துணை முதல்வர் சிவகுமார்.
ஜூலை 20, 2024