உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கரூர் சம்பவத்தில் ஆனந்தை தூக்க 3 தனிப்படை | karur stampede | tvk vijay update | N Ananth | Nirmal Ku

கரூர் சம்பவத்தில் ஆனந்தை தூக்க 3 தனிப்படை | karur stampede | tvk vijay update | N Ananth | Nirmal Ku

விஜய்க்கு அடுத்த முக்கிய புள்ளி தீவிரமாக தேடும் 3 தனிப்படைகள் கரூர் சம்பவத்தில் அடுத்த பரபரப்பு கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இன்னொரு பக்கம் கரூர் நகர் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். முதல் கட்டமாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், நகர பொறுப்பாளர் பவுன் ராஜ் ஆகியோரை அடுத்தடுத்து கைது செய்தனர். வழக்கில் ஏ2 ஆக சேர்க்கப்பட்டு இருக்கும் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரையும் கைது செய்ய இப்போது போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. 2 பேரையும் கைது செய்வதற்கு என்றே 3 தனிப்படைகளை அமைத்து மத்திய ஐஜி ஜோஷி நிர்மல் குமார் உத்தரவிட்டுள்ளார். தலைமறைவாக இருக்கும் இரு தவெக தலைவர்களையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சீக்கிரமே 2 பேரும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் தரப்பு சொல்கிறது.

அக் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !