தவெக மேல்மட்ட தலைவர்கள் சொல்லும் ரிப்போர்ட் | TVK | Dmk | Karur Stampede | vijay Arrest
படையுடன் வரப்போகும் விஜய்! கைது மிரட்டலுக்கு விஜய்யின் மாஸ்டர் பிளான் கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் இறந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் சூறாவளியாக வீசி வருகிறது. தவெக நிர்வாகிகள் முறையாக திட்டமிட்டு பிரசார கூட்டத்தை நடத்தாததே காரணம் என அரசு தரப்பும், போலீசின் பாதுகாப்பு குறைபாடே நெரிசலுக்கு காரணம் என தவெக தரப்பும் கூறி வருகின்றனர். விஜய் சரியான தலைமை பண்புடன் செயல்படவில்லை என கடுமையாக சாடிய ஐகோர்ட், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டது. அக்குழு விசாரணையை துவங்கி இருக்கும் நிலையில் கட்சியின் மொத்த செயல்பாடும் முடங்கி இருப்பதாக விஜய் கருதுகிறார். சில நாட்களாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அதன் அடிப்படையில் அதிரடியாக சில விஷயங்களை செய்ய விஜய் முடிவெடுத்து இருப்பதாக தவெகவினர் கூறுகின்றனர். அக்கட்சி மூத்த தலைவர்கள் கூறியதாவது: துவக்கத்தில் விஜயின் பேச்சை திமுக சாதாரணமாகவே எடுத்து கொண்டது. ஆனால் தவெகவின் மதுரை மாநாடு மற்றும் அவருடைய பிரசார கூட்டங்களுக்கு அலை அலையாக திரண்ட மக்கள் கூட்டத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தது.