காஷ்மீரில் தனிப்பெரும் கட்சியாக பாஜ உருவெடுத்து சாதனை | Kashmir Election Result | BJP vs Congress
காஷ்மீரில் நம்பர்-1 கட்சி பாஜ சாம்ராஜ்யம் உருவானது எப்படி? ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இன்ஜினியர் ரஷீத்தின் ஜமாத் கட்சி, மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் கட்சி, முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி ஆகியோரை மக்கள் தயவு தாட்சண்யமின்றி நிராகரித்துள்ளனர். அதே நேரம் பாஜவின் செல்வாக்கு கணிசமாக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவு 29 இடங்களில் பாஜ வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாமல் போனாலும், சட்டசபையில் பிரதான எதிர்கட்சியாக பாஜ அமரப்போகிறது. அதே போல் ஜம்மு காஷ்மீரில் அதிக ஓட்டுகள் வாங்கிய தனிப்பெரும் கட்சியாகவும் பாஜ உருவெடுத்துள்ளது. எதிர்த்து போட்டியிட்ட எல்லா கட்சிகளை விடவும் பாஜவுக்கு தான் ஓட்டு சதவீதம் அதிகம் கிடைத்துள்ளது.