/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுக துரோகத்தை மக்கள் மறக்க மாட்டார்கள்: அண்ணாமலை | katchatheevu| mk stalin|tn fishermen issue
திமுக துரோகத்தை மக்கள் மறக்க மாட்டார்கள்: அண்ணாமலை | katchatheevu| mk stalin|tn fishermen issue
கச்சத்தீவை மீட்க கோரி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், தமிழக பாஜ தலைவர் அதை விமர்சித்து உள்ளார். அவரது அறிக்கை: சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, தமிழகம் மோசமான இருண்ட காலத்தில் இருக்கும்போது, நாள்தோறும் நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்பு தீர்மானம். கடந்த 20 ஆண்டுகளில், இலங்கை அரசால் ஆயிரக்கணக்கான இந்திய மீன்வர்கள் கைது செய்யப்பட்டனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதற்கு காரணம், 1974ல் முதல்வராக இருந்த கருணாநிதி, காங்கிரஸ் மத்திய அரசுடன் சேர்ந்து கச்சத்தீவு உரிமையை விட்டு கொடுத்ததுதான்.
ஏப் 02, 2025