நடிகைக்கு பாலியல் தொல்லை: எம்எல்ஏவால் காங்கிரசுக்கு சிக்கல் | kerala Congress MLA rahul suspended
kerala Congress MLA rahul suspended actress Rini ann george torture pallakkad police crime கேரள மாநிலம், பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராகுல் மம்கூடத்தில். Rahul Mamkootathil கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். இவர் மீது மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் கடந்த வாரம் பாலியல் புகாரை கூறினார். ஆனால், அவர் ராகுல் பெயரை வெளிப்படையாக கூறவில்லை. அது ராகுல் தான் என, கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அது உறுதியும் ஆனது. ராகுலுடன் 3 ஆண்டுகளுக்கு முன் சமூக வலைதளத்தில் பழக்கம் ஏற்பட்டது. கொஞ்சம் நட்புடன் பழகிய பிறகு, வாட்ஸ் ஆப் மூலம் ஆபாச மெசேஜ்களை அனுப்பினார். நான் அதற்கு ரெஸ்பான்ஸ் பண்ணவில்லை. ஆனாலும் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருந்தார். தனியாக ஓட்டலுக்கு வரும்படி அழைத்தார். அவரது போக்கு தடம்மாறிச் செல்வதை உணர்ந்த நான் அவரை எச்சரித்தேன். உங்கள் கட்சித் தலைவர்களிடம் சொல்வேன் என்றேன்; ஆனால், போய் சொல்லு,, யாரும் காது கொடுத்து கேட்க மாட்டார்கள்; எனக்கு அந்தளவுக்கு செல்வாக்கு இருக்கு என மிரட்டும் தொணியில் சொன்னார் என நடிகை ரினி ஆன் ஜார்ஜ் குற்றஞ்சாட்டியிருந்தார். அவரைத் தொடர்ந்து,சமூக சேவையில் ஈடுபடும் அவந்திகா என்ற திருநங்கையும் எம்எல்ஏ ராகுல் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறினார். தேர்தல் பிரசாரத்தில் ராகுலை சந்தித்தேன்; பேஸ்புக்கில் ப்ரண்ட்ஸ் ரெக்யூஸ்ட் கொடுத்தேன். அதன்பிறகு போன் மூலம் பேசத் துவங்கினார்; இரவு 11 மணிக்கு மேல்தான் கால்பண்ணுவார்; சமூக விஷயங்கள் பற்றி பேச மாட்டார்; எப்போதும் செக்ஸ் பற்றித்தான் பேசுவார்; மிக மோசமான ஆபாச மெசேஜ்களை அனுப்பினார். என்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புவதாக பச்சையாக சொன்னார். அவரது பேச்சு பலாத்காரம் செய்வதுபோல இருந்தது. இதுபற்றி எனக்கு தெரிந்த காங்கிரஸ் தலைவர்களிடம் புகாராக கூறினேன். ஆனால் யாரும் ராகுல் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என அவந்திகா கூறினார்.