உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சபையில் சொன்னபடி திமுகவுக்கு விஜய் முதல் வெடி KN Nehru ED case | TN ED Raid | TVK vs DMK | CM Vijay

சபையில் சொன்னபடி திமுகவுக்கு விஜய் முதல் வெடி KN Nehru ED case | TN ED Raid | TVK vs DMK | CM Vijay

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், 2024-2025ம் ஆண்டுகளில் உதவி, இளநிலை பொறியாளர் உள்ளிட்ட, 2,538 பணியிட நியமனங்களுக்கு 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டதாக, கடந்த ஆண்டு அக்டோபர் 27ல் தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தது. அதன் பிறகும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இன்னொரு பக்கம், வழக்குப்பதிவு செய்யும் உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி, முன்னாள் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு மற்றும் முந்தைய திமுக அரசு தரப்பில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சென்னை ஐகோர்ட்டில் நேரு தரப்பில் முறையீடு செய்ததை ஏற்று, ஜூன் 23ம் தேதி வரை லஞ்ச ஒழிப்புத் துறை மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டு இருந்தது. #KNNehruEDCase #TNEdRaid #TVKvDMK #CMVijay #NehruInvestigation #TamilNaduPolitics #EDRaids #PoliticalUpdates #IndianPolitics #CorruptionFight #VijayLeadership #DMKPolitics #PartyRivalry #PoliticalNews #InvestigativeJournalism #TamilNaduED #TFG #PoliticalDrama #CurrentAffairs

ஜூன் 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை