3 மணி நேர கொடூரம்... கொல்கத்தா சம்பவத்தில் பகீர் | kolkata law student case | manojit mishra | TMC
கொல்கத்தா சட்டக்கல்லூரி வளாகத்தில் 24 வயது மாணவியை, அதே கல்லூரியின் ஊழியர், மாணவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது. கொடூரன்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது 4வது குற்றவாளியாக கல்லூரியின் செக்யூரிட்டியை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். சம்பவத்தன்று, தேர்வு கட்டணம் செலுத்துவதற்காக பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரிக்கு சென்றார். கல்லூரியில் திரிணாமுல் கட்சியின் மாணவர் அமைப்பு செயல்படுகிறது. கல்லூரி நேரத்துக்கு பிறகு இந்த அமைப்பு மீட்டிங் நடந்தது. அமைப்பில் மாணவிக்கும் பதவி இருந்ததால், மற்ற நிர்வாகிகளுடன் பங்கேற்றார். கூட்டத்தை 31 வயதான மனோஜித் மிஸ்ரா என்பவன் நடத்தினான். இவன் தான் மாணவி சம்பவத்தில் முக்கிய குற்றவாளி.