சுதந்திரமாக நடமாட முடியாது; குணால் காம்ராவுக்கு மிரட்டல் | Kunal Kamra | Eknath Shinde | Shiv Sena |
ஷிண்டேவை விமர்சித்த காமெடியன் கொதித்து எழுந்த சிவசேனாவினர்! ஓட்டலை அடித்து நொறுக்கி துவம்சம் மகாராஷ்டிராவை சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் குணால் காம்ரா, மும்பையில் நடந்த நயா பாரத் என்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார். சமகால அரசியல் குறித்து பேசிய அவர், சிவசேனா கட்சியை உடைத்து, பாஜவுடன் கூட்டணி வைத்ததற்காக துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என்று கடுமையாக விமர்சித்தார். காமெடியன் காம்ராவின் இந்த பேச்சால் ஷிண்டேவின் சிவசேனா கட்சியினர் கொதித்து போயினர். மும்பையின் ஹார் பகுதியில் குணால் காம்ரா நிகழ்ச்சி நடந்த ஹோட்டலை அடித்து நொறுக்கி சூறையாடினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், குணால் காம்ராவின் போட்டோவை தீவைத்து எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். ஷிண்டேவின் சிவசேனா கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல் கனல், எம்எல்ஏ முராஜி படேல் அளித்த புகாரையடுத்து குணால் காம்ரா மீது போலீசார் வழக்கு பதிந்தனர். குணால் காம்ரா 2 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் அவர் மும்பையில் சுதந்திரமாக நடமாட முடியாது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் மிரட்டல் விடுத்தார். ஹோட்டல் சூறையாடப்பட்டதற்கு உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சர்ச்சைக்கு பிறகு குணால் காம்ரா தனது எக்ஸ் பக்கத்தில் சிறிய அளவிலான அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்திருக்கும் படத்தை போஸ்ட் செய்து முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழி என பதிவிட்டுள்ளார். சர்ச்சைகளுக்கு பெயர் போன குணால் காம்ரா, ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்து மேலும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்