மகாராஷ்ட்ர அமைச்சரின் பதவி பறிபோகும் அபாயம் Maharashtra government Agriculture Minister Manikrao
மஹாராஷ்டிராவில் பா.ஜ, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. விவசாய அமைச்சராக மாணிக்ராவ் கோகாடே இருக்கிறார். இவர், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்.கிரசை சேர்ந்தவர். 1995-ம் ஆண்டு மாணிக்ராவ் கோகாடேவும், அவர் சகோதரர் சுனில் கோகாடேவும் குறைந்த வருவாய் பிரிவினருக்கான அரசின் அடுக்கு மாடி குடியிருப்பில் தலா ஒரு வீடு ஒதுக்கீடு பெற்றனர். அரசின் வீட்டு வசதி திட்டங்களில் முதல்வருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு உண்டு. அந்தப்பிரிவில் இவர்கள் இருவரும் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளனர். இந்த சலுகையை பெற குறைந்த வருவாய் கொண்டவராக இருக்க வேண்டும்; சொந்தமாக வேறெங்கும் வீடு இருக்கக்கூடாது. இந்த 2 நிபந்தனைகளும் கோகாடே சகோதரர்களுக்கு பொருந்தாது. அதனால் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து தலா ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொண்டனர். இது குறித்து முன்னாள் அமைச்சர் துக்காராம் டிகோலே Tukaram Dighole போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாசிக் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் 30 ஆண்டாக நடந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பு கூறினார்.