உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமைச்சர் காந்தி கையை பிடித்து உதவி கேட்ட மூதாட்டி | Minister Gandhi | Old lady asking help

அமைச்சர் காந்தி கையை பிடித்து உதவி கேட்ட மூதாட்டி | Minister Gandhi | Old lady asking help

வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை ராணிப்பேட்டை மாவட்டம் முழுதும் செயல்படுத்தும் வகையில் வாலாஜா ஒன்றியம் சுமைதாங்கி ஊராட்சியில் கைத்தறி துணிநூல் அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார். நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட அமைச்சரை அதே பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி வள்ளியம்மா திடீரென வழிமறித்தார். தனது வீட்டுமனை கூட்டு பத்திரத்தில் இருந்து பிரிக்கப்பட்ட நிலையில், இடத்தை முறையாக அளவீடு செய்து பட்டாவாக மாற்றி கொடுக்காமல் பல ஆண்டுகளாக அலைக்கழிக்கப்பட்டு வருவதாக அமைச்சரின் கையை பிடித்து வேதனையுடன் புலம்பினார். இடத்தை அளந்து பட்டா மாற்றி கொடுக்க உதவுமாறு கையெடுத்து கும்பிட்டு கேட்டார்.

ஆக 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி