/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமைச்சரை அழைக்க ஒரு மணி நேரம் போராடிய கலெக்டர் | Ministerial Rift | Protocol Power Dispute
அமைச்சரை அழைக்க ஒரு மணி நேரம் போராடிய கலெக்டர் | Ministerial Rift | Protocol Power Dispute
கும்பகோணம் தொகுதி தவெக எம்.எல்.ஏவான வினோத் வேளாண் துறை அமைச்சராக உள்ளார். தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருந்து வருகிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ ஷாஜகான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக உள்ளார். அமைச்சரவை பட்டியலில் , அமைச்சர் ஷாஜகான், 13வது இடத்திலும், வினோத், 24வது இடத்திலும் உள்ளனர். இந்த வரிசைப்படி, அரசு நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது விதி.
ஜூலை 25, 2026