இதுவும் பயங்கரவாதம்தான்:பாஜ மீது ஸ்டாலின் பாய்ச்சல் | MK stalin | Bihar Election | Rahul gandhi Bjp
எதற்கு மன்னிப்பு கேட்கணும்? மிரட்டலுக்கு ராகுல் அஞ்ச மாட்டார் பீகார் யாத்திரையில் ஸ்டாலின் பரபர பேச்சு பீகாரில் லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் நடத்தும் வாக்காளர் உரிமை யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின், பீகார் எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் எம்பிக்கள் பிரியங்கா, கனிமொழி பங்கேற்றனர். யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின் பேச ஆரம்பித்தபோது, மக்கள் ஆரவாரம், கைத்தட்டல் அடங்க சில நிமிடங்கள் ஆனது. லாலு பிரசாத் மற்றும் கருணாநிதி இடையிலான நட்பை நினைவுகூர்ந்து ஸ்டாலின் பேசினார். அவர்களைப்போல மக்கள் நலனுக்காக ராகுலும் ஜேதஸ்வி யாதவும் ஒன்றிணைந்துள்ளனர். பீகார் தேர்தலில் உங்கள் நட்புக்கு வெற்றி நிச்சயம் என்றார். பீகாரில் இண்டி கூட்டணி வெற்றியை தடுக்க பாஜ தடுக்க முயற்சிக்கிறது. பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியது ஜனநாயக படுகொலை. பிறந்த மண்ணிலேயே ஒருவரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதும் ஒரு வகையில் பயங்கரவாதம் தான் என ஸ்டாலின் கூறினார். ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறுகிறார்; இந்த மிரட்டல்களுக்கு அவர் அஞ்ச மாட்டார் என்றார், ஸ்டாலின். லோக்சபா தேர்தலில் 400 இடம் என்ற பாஜவின் கனவை தகர்த்தது இண்டி கூட்டணி. மக்கள் சக்திக்கு முன் சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை பீகார் மக்கள், வரும் சட்டசபை தேர்தலில் நிரூபித்துக் காட்ட வேண்டும் எனவும் ஸ்டாலின் கூறினார்.