உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கருணாநிதி நினைவு நாள் பேரணிக்கு தொண்டர்களுக்கு அழைப்பு | MK Stalin | DMK | Karunanidhi Ex cm | Eps

கருணாநிதி நினைவு நாள் பேரணிக்கு தொண்டர்களுக்கு அழைப்பு | MK Stalin | DMK | Karunanidhi Ex cm | Eps

சேராத இடம் சேர்ந்து தீராத பழி சுமக்கும் பழனிசாமி பொய் பிரசாரம் செய்வதாக ஸ்டாலின் தாக்கு முதல்வர் ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு பயனையாவது பெற்று முன்னேற்றம் கண்டு வருவதை நாடறியும். மாநில நலன் மீது கொஞ்சமும் அக்கறையில்லாத அதிமுக தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜவுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு மிகப் பெரும் துரோகத்தை இழைத்து வருகிறது. உண்மையான அதிமுக தொண்டர்களே மனம் புழுங்குகிற வகையில், அடிப்படைக் கொள்கைகள் ஏதுமற்ற எதிர்க்கட்சித் தலைவர் டில்லி வரை சென்று மண்டியிட்டு பாஜவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். சேராத இடந்தன்னில் சேர்ந்து தீராத பழி சுமந்தபடி ஊர் ஊராக பயணித்து, பொய்களை பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். அறிவியல் பூர்வமாக நிறுவிய தமிழர் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழாய்வு முடிவுகளை மத்திய பாஜ அரசு வெளியிட மறுக்கிறது. ஆரியப் பண்பாட்டை நம் மீது திணிக்கப் பார்க்கிறது. தலைவர் கருணாநிதி இன்று நம்முடன் இருந்திருந்தால் எப்படிப்பட்ட உணர்வெழுச்சியுடன் மத்திய அரசை எதிர்த்து நிற்பாரோ, அதே உணர்வுடன் மத்திய பாஜ அரசின் தமிழர் விரோத சூழ்ச்சிகளை எதிர்த்து நிற்கிறோம். ஆகஸ்ட் 7 நம் உயிர்நிகர் தலைவரின் நினைவு நாளில் தமிழர் வாழும் நிலமெங்கும் அவர் நினைவை போற்றுவோம். அன்றைய தினம் தலைவர் கருணாநிதியின் நினைவிடம் நோக்கி நடைபெறும் அமைதி பேரணியில் உடன்பிறப்புகள் கடலென திரண்டு வணக்கத்தைச் செலுத்துவோம். வீடுகளிலும் வீதிகளிலும் தலைவரின் திருவுருவப் படங்களுக்கு, மலர்தூவி வணக்கம் செலுத்துங்கள். தலைவர் கலைஞரின் நினைவுகளை நெஞ்சிலேந்தி, கொள்கைவழிப் பயணத்தைத் தொடர்ந்து, 2026 சட்டசபை தேர்தலில் 7-வது முறையாக திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆக 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை