வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் | mk stalin | tn assembly | waqf
நள்ளிரவில் நிறைவேறிய மசோதா அரசியல் சாசனம் மீதான தாக்குதல் 232 ஓட்டு சாதாரணமா! வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நேற்று நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் இன்று திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர். அனைத்து எதிர்ப்புகளையும் மீறி மசோதா நிறைவேற்றியதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து பேசினார். ஸ்பீச் ஸ்டாலின் தமிழக முதல்வர் திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி அதிமுகவும் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியதற்கு தங்கள் எதிர்ப்பை சட்டசபையில் பதிவு செய்தது. பின்னர் வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஸ்டாலின் கூறிய கோஷத்தை பாஜ தவிர்த்து மற்ற உறுப்பினர்கள் திரும்ப கூறினர்.