தவெக விமர்சித்தாலும் விட்ருங்க திமுக போட்ட அரசியல் கணக்கு mk stalin| dmk| tvk| actor vijay
மாமல்லபுரத்தில் நடந்த தவெக பொதுக்குழுவில் பேசிய தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, கரூர் சம்பவம் தொடர்பாக திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். கரூர் சம்பவத்துக்கு துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மகேஷ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தான் காரணம் என வெளிப்படையாகவே கூறினார். முதல்வர் ஸ்டாலினுக்கு உடல் நலம் சரியில்லை; எழுதிக் கொடுத்தால், அதை மட்டும் படிப்பார் எனவும் கூறினார். இதனால், ஆதவ் அர்ஜுனா மீதும் முக்கிய நிர்வாகிகள் மீதும் வழக்கு பதியப்படும் என கருதப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இது பற்றி திமுக வட்டாரங்கள் கூறும்போது, பொதுக் குழுவில் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் என்று அறிவித்த பின், அதிமுக உடன் தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை என்ற நிலை உள்ளது. இந்நிலையில், தேவையில்லாமல் விஜயை டென்ஷன் ஆக்கி அவரை அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துவிடக் கூடாது என திமுக தலைமை நினைக்கிறது. அதனாலேயே, அக்கட்சியினர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது என அந்த வட்டாரம் கூறியது.