வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதுவே ஒரு ஆணவ அரசியல் தானே? நல்லதையே விரும்பி செய்யும் தந்தையை எதிர்க்கும் தனயன் போலிருக்கிறது.
ஓரவஞ்சனை, ஆணவம் இனியும் நீடிக்க விட மாட்டோம் | M.K.Stalin | DMK | BJP alliance | Warning | Unforgett
மகாராஷ்டிராவில் இந்தி திணிப்புக்கு எதிராக தாக்கரே சகோதரர்கள் நடத்திய போராட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இந்தி திணிப்பை முறியடிக்க திமுகவும், தமிழக மக்களும் தலைமுறை தலைமுறையாக மொழி உரிமை போர் நடத்தி வருகின்றனர். அது இப்போது மாநில எல்லைகளை கடந்து மகாராஷ்டிராவில் போராட்ட சூறாவளியாக சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. தமிழக பள்ளிகளில் 3வது மொழியாக இந்தியை கற்பித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சட்டத்துக்கு புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்கிறது மத்திய பாஜ அரசு. ஆனால் தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி 2வது முறையாக பின்வாங்கி இருக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக சகோதரர் உத்தவ் தாக்கரே தலைமையில் மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்ட பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது. உத்தர பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன? என்றும், இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன - இந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள்? என்றும் ராஜ் தாக்கரே எழுப்பிய கேள்விகளுக்கு, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கும் மத்திய அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்பதை நன்றாக அறிவேன். இனியாவது ஒருங்கிணைந்த கல்வி திட்ட நிதி 2,152 கோடி ரூபாயை வைத்துக்கொண்டு தமிழகத்தை பழிவாங்கும் போக்கை மத்திய அரசு மாற்றிக் கொள்ளுமா? தமிழக பள்ளி குழந்தைகளின் கல்விக்காக சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்குமா? இந்தி திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை இந்தி நாடாக்கும் செயல்திட்டத்தை புரிந்துகொள்ளாமலும், இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற பசப்பு வார்த்தைகளை கிளி பிள்ளைகளை போல ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர், இனியாவது திருந்த வேண்டும். மராட்டியத்தின் எழுச்சி அவர்களின் அறிவுக் கண்களை திறக்கும்! தமிழுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவம் நீடிக்க விட மாட்டோம். தமிழுக்கும் தமிழகத்துக்கும் செய்துவரும் துரோகத்துக்கு பாஜ பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும் அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும் தமிழகம் மறக்க முடியாத பாடத்தை மீண்டும் ஒருமுறை கற்பிக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இதுவே ஒரு ஆணவ அரசியல் தானே? நல்லதையே விரும்பி செய்யும் தந்தையை எதிர்க்கும் தனயன் போலிருக்கிறது.