அரசியல்வாதிகளுக்கு சல்யூட் அடிக்கவா ராணுவம்? மோடி கொதிப்பு | Modi on agnipath | Modi vs Congress
அக்னிபாத் திட்டம் ஏன்? புட்டு புட்டு வைத்த மோடி காங்கிரசுக்கு பதிலடி கார்கில் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய மோடி காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். அக்னி பாத் திட்டம் பற்றி காங்கிரஸ் தொடர்ச்சியாக முன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலடி கொடுத்தார். பிரதமர் மோடி பேசியது: இந்திய ராணுவத்தில் முக்கிய சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்தது. அதன் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது தான் அக்னிபாத் திட்டம். ஆனால் முன்பிருந்த சீர்திருத்தம் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. இந்திய ராணுவத்தை இளமையாகவும் புத்துயிருடனும் வைத்திருக்க வேண்டும். எந்த நேரத்திலும் போருக்கு ஆயத்தமாக வைத்திருக்க வேண்டும். இது தான் அக்னிபாத் திட்டத்தின் நோக்கம். அக்னிபாத் திட்டத்தில் எதிர்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார்கள். தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை அரசியலாக்க பார்க்கிறார்கள். உலக அளவில் ராணுவ வீரர்களின் சராசரி வயதை விட இந்திய ராணுவ வீரர்களின் சராசரி வயது கூடுதலாக இருந்தது. இதுபற்றி பல கேள்விகள் எழுந்தன. இதற்கு அக்னி பாத் திட்டம் விடை கண்டது.