உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மோடி-லூலா சம்பவம்! டிரம்ப் மூக்கு அறுந்த கதை modi lula talk | india vs us | modi vs trump | brazil

மோடி-லூலா சம்பவம்! டிரம்ப் மூக்கு அறுந்த கதை modi lula talk | india vs us | modi vs trump | brazil

டிரம்ப் மூக்கை அறுத்த பெரிய நாடு சொன்னதை செய்து காட்டிய லூலா! மோடி போன் கால் சீக்ரெட் US-ஐ அலறவிட்ட சம்பவம் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு அடாவடித்தனமாக வரி விதித்து வருகிறார். இப்போதைய சூழலில் டிரம்ப் வரியால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் என்றால் இந்தியாவும் பிரேசிலும் தான். இரு நாடுகளுக்கும் அவர் அவர் 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இந்தியாவுக்கு அவர் முதலில் விதித்த 25 சதவீத வரி அமலுக்கு வந்துவிட்டது. 2வது கட்டமாக விதித்த 25 சதவீத வரி இம்மாதம் இறுதியில் அமலாகிறது. ஆனால் பிரேசிலில் டிரம்ப் போட்ட 50 சதவீத வரியும் அமலுக்கு வந்து விட்டது. இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் வரி விதிப்பதற்கு வெவ்வேறு காரணங்களை டிரம்ப் சொல்லி வருகிறார். பிரேசிலுக்கு வரி போட்டது பற்றி பேசிய டிரம்ப், அந்நாட்டின் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலாவுக்கு ஒரு ஆஃபர் கொடுத்தார். ‛வர்த்தக பற்றாக்குறையை சரி செய்யவே பிரேசிலுக்கு 50 சதவீத வரி போட்டுள்ளேன். இந்த பிரச்னை தொடர்பாக விவாதிக்க எப்போது வேண்டுமானாலும் பிரேசில் அதிபர் லூலா எனக்கு போன் செய்யலாம். பிரச்னையை பேசி தீர்க்கலாம் என்றார். ஆனால் மோடி பெயரை சொல்லி டிரம்ப் மூக்கை அறுக்கும் விதமாக பிரேசில் அதிபர் லூலா அறிக்கை வெளியிட்டார். ‛வரி விதிப்பு குறித்து நான் டிரம்பிடம் பேசமாட்டேன். அவர் எதையும் கேட்பதாக தெரியவில்லை. ஆனால் இது பற்றி பிரதமர் மோடியை அழைத்து பேசுவேன். சீன அதிபர் ஜின்பிங்கிடம் பேசுவேன் என்று அதிரடி காட்டினார். பிரேசில் அதிபர் அறிக்கை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போத சொன்னதையும் செய்து காட்டி டிரம்ப் மூக்கை அறுத்து விட்டார் லூலா. தான் சொன்னபடி பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் லூலா போன் செய்தார். இரு தலைவர்களும் ஒரு மணி நேரம் பேசினார்கள். அமெரிக்காவின் அடாவடித்தனமான வரி, பிரேசில்-இந்தியா வர்த்தம், பிரிக்ஸ் மாநாட்டின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச அரசியல் பற்றி விவாதித்தனர். அதிபர் லூலாவுடனான உரையாடல் சிறப்பாக அமைந்தது. பிரேசில் பயணத்தை மறக்க முடியாததாகவும், அர்த்தமுள்ளதாகவும் அவர் மாற்றிக்காட்டினார். அதற்காக அவருக்கு நன்றி சொன்னேன். எரிசக்தி, வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா, பிரேசில் உறவை இன்னும் வலுப்படுத்துவது பற்றி பேசினோம். மக்களை மையப்படுத்தி உருவான உலக தெற்கு நாடுகளின் கூட்டமைப்பு மொத்த உலகத்துக்கும் நன்மை பயக்கும் என்று மோடி கூறி உள்ளார். மோடியிடம் பேசியது பற்றி பிரேசில் அதிபர் லூலாவும் பரபரப்பான அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியது: இந்திய பிரதமர் மோடிக்கு நான் போன் செய்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினேன். கடந்த மாதம் மோடி பிரேசில் வந்த போது எடுத்த முக்கிய முடிவுகள் பற்றி 2 பேரும் பேசினோம். சர்வதேச பொருளாதார நிலை, ஒரு தலைப்பட்சமாக வரி விதிப்பது குறித்து விவாதித்தோம். ஒருதலைபட்ச வரியால் இப்போது உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் என்றால் அது இந்தியாவும் பிரேசிலும் தான். இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் எவ்வளவு இணக்கமாக செயல்பட முடியும் என்பதை விவாதித்தோம். இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினோம். அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவுக்கு வருகை தர இருப்பதை மோடியிடம் உறுதி செய்தேன். இதற்கு முன்னோட்டமாக துணை அதிபர் ஜெரால்டோ ஆல்க்மின் அக்டோபரில் இந்தியா வருவார். வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு, கனிமவளம், சுகாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இது தொடர்பாக விவாதிக்க அமைச்சர்கள், தொழில் அதிபர்களும் துணை அதிபருடன் இந்தியா வருவார்கள். 2030ல் இந்தியா, பிரேசிலின் இருதரப்பு வர்த்தகம் 1.7 லட்சம் கோடி ரூபாயை விட அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கையும் 2 பேரும் நினைவுகூர்ந்தோம். இதற்காக இரு நாடுகள் இடையே போடப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் இன்னும் விரிவு செய்யப்பட உள்ளது என்று பிரேசில் அதிபர் லூடா கூறினார். இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் அதிக வரி விதிப்பதற்கு வெவ்வேறு காரணங்களை டிரம்ப் சொன்னாலும், உண்மை காரணங்கள் வேறு. ரஷ்யாவிடம் அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியாவும், பிரேசிலும் முக்கியமானவை. அதே போல் இரு நாடுகளுமே பிரிக்ஸ் அமைப்பின் தூண்களாக இருக்கின்றன. பிரிக்ஸ் என்றாலே டிரம்புக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. டாலருக்கு மாற்றாக அவர்கள் வேறு கரன்சியை கொண்டு வந்து விடுவார்களோ என்பது அவரது முதல் பயம். அமெரிக்கா அங்கம் வகிக்கும் மற்ற அமைப்புகளுக்கு மாற்றாக, பிரிக்ஸ் தங்களுக்குள்ளே வர்த்தகத்தை பெருக்க புதிய வர்த்தக வழிமுறைகளை கொண்டு வந்து விடுவார்களோ என்பதும் டிரம்பின் அடுத்த அச்சம். அதே போல் பிரேசிலும், இந்தியாவும் அமெரிக்காவுக்கு நிறைய ஏற்றுமதி செய்கின்றன. அதே நேரம் அமெரிக்காவால் அதே அளவுக்கு இந்த இரு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. உதாரணத்துக்கு இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களில், பாதியை தான் அதனால் இந்தியாவுக்கு விற்க முடிகிறது. இந்த வர்த்தக பற்றாக்குறையை எப்படியாவது சரி செய்து விட வேண்டும் என்று நினைக்கிறார். அதுவும் பிரேசில், இந்தியாவுக்கு அவர் அதிக வரி விதிக்க ஒரு காரணம். இப்போது பிரேசில் அதிபர் மற்றும் பிரதமர் மோடியின் உரையாடல் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நிச்சயம் டிரம்புக்கும் இது எரிச்சலை உண்டு பண்ணி இருக்கும் என்கின்றனர் சர்வதேச நிபுணர்கள்.

ஆக 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி