உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உலகின் மதிப்பு மிக்க தலைவர்; யாருக்கு எந்த இடம்; கருத்துக்கணிப்பு முடிவு | Modi tops | PM India

உலகின் மதிப்பு மிக்க தலைவர்; யாருக்கு எந்த இடம்; கருத்துக்கணிப்பு முடிவு | Modi tops | PM India

அமெரிக்காவை சேர்ந்த மார்னிங் கன்சல்ட்(the Morning Consult Global Leader Approval Tracker) என்கிற உலகளாவிய கருத்துக்கணிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் இந்த ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. உலக மக்களிடம் அதிக நம்பிக்கை, உயர்ந்த மதிப்பு பெற்ற தலைவர் யார் என்று அந்த நிறுவனம் கேட்டது. இதற்கு 75 சதவீதம் பேர் பிரதமர் மோடி என பதில் அளித்துள்ளனர். தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங் 59 சதவீத ஆதரவுடன் 2ம் இடமும், அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே 57 சதவீத ஆதரவுடன் 3ம் இடமும் பெற்றனர். 4வது இடத்தில் கனடா பிரதமர் மார்க் கார்னி, 5-வது இடத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் உள்ளனர். மெக்சிகோ அதிபர் கிளவுடியா ஷெயின்பாம், சுவிட்சர்லாந்து அதிபர் கரீன் கெல்லர் ஷட்டர் ஆகியோர் முறையே 6,7 இடங்களில் உள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு 44% பேர் ஆதரவு தெரிவித்தனர். அவர் இந்த வரிசைப் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளார். மார்னிங் கன்சல்ட் நிறுவனத்தின் கருத்து கணிப்பில், 2021 முதல் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். வலிமையான தலைமை, உலகளாவிய மரியாதையுடன் பாரதம் பாதுகாப்பான கைகளில் உள்ளது என பாஜ தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா தெரிவித்துள்ளார்.

ஜூலை 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி