டிரம்புக்கு பிரச்னை இதுதான்: அமெரிக்க எம்பி 'சும்மா கிழி'! Modi vs trump| india america
டிரம்ப்பின் ஈகோ இந்திய உறவை அழித்துவிட அனுமதிக்க முடியாது! மோடி மறுத்ததால் டிரம்புக்கு ஈகோ அமெரிக்கா - இந்தியா உறவை அழிக்கும் நடவடிக்கையில் அதிபர் டெனால்ட் டிரம்ப் ஈடுபடுவதாக அமெரிக்க எம்பியும், இந்தியா-அமெரிக்க கூட்டமைப்பின் இணை தலைவருமான ரோ கன்னா குற்றம் சாட்டியுள்ளார். அதற்கான 5 காரணங்களையும் அவர் சொல்கிறார். அமெரிக்க- இந்தியா உறவை வலுப்படுத்த 30 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார். இந்தியா மீது அவர் 50 சதவீத வரியை விதித்து இருக்கிறார். இது, பிரேசிலை தவிர வேறு எந்த நாடு மீது விதிக்கப்படாத உயர்ந்த வரி விகிதம். சீனா மீது விதிக்கப்பட்ட வரியை விடவும் அதிகமானது. இது, அமெரிக்காவுக்கான இந்தியாவின் தோல், ஜவுளி உள்ளிட்ட ஏற்றுமதியை பாதிக்கிறது. அமெரிக்க உற்பத்தியாளர்களையும், இந்தியாவுக்கான அமெரிக்க ஏற்றுமதியையும் பாதிக்கிறது. அதிபர் டிரம்ப்பின் இந்த நடவடிக்கை, இந்தியாவை சீனா மற்றும் ரஷ்யாவை நோக்கியும் தள்ளுகிறது. இதற்கான காரணங்கள் மிகவும் எளிமையானவை. அமைதிக்கான நோபல் பரிசுக்காக அதிபர் டிரம்ப்பை பரிந்துரைக்கவும் மோடி மறுத்துவிட்டார். ஆனால், பாகிஸ்தான் ஆதரித்தது. அமைதிக்கான நோபல் பரிசுக்காகவும் டிரம்ப்பை பரிந்துரைத்தது. இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு, நான் தான் காரணம் என அதிபர் டிரம்ப் உரிமை கோரினார். ஆனால், இந்த விவகாரம், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பிரச்னை என்றுகூறி, டிரம்ப் உரிமை கோரியதை பிரதமர் மோடி நிராகரித்தார். அதிபர் டிரம்ப்பின் இந்த ஈகோ, இந்தியா- அமெரிக்கா உறவை அழித்துவிட அனுமதிக்க முடியாது. உலகை அமெரிக்காதான் வழிநடத்துகிறது; சீனா அல்ல என்பதை உறுதி செய்ய இது மிகவும் முக்கியம். இந்தியாவுடனான உறவு அழிக்கப்படுகிறபோது, அதிபர் டெனால்ட் டிரம்ப்புக்கு ஓட்டு போட்ட இந்திய அமெரிக்கர்களே எங்கே இருக்கிறீர்கள்? என்று எம்பி ரோ கன்னா கேட்டுள்ளார்.