அஜர்பைஜான் அக்னி கோயிலில் அமைச்சர் ஜெய்சங்கர் வழிபாடு
ஈரானுக்கு வடக்கேயும், ஈராக்கிற்கு வடகிழக்கேயும் அமைந்துள்ள நாடு அஜர்பைஜான். ஒரு காலத்தில் சோவித் யூனியனின் ஓர் அங்கமாய் இருந்த இந்நாட்டில் பிரசித்தி பெற்ற, அடேஷ்கா அக்னி கோயில் உள்ளது. அரசு முறைப் பயணமாக அந்நாட்டிற்கு சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்த கோயிலுக்கு சென்றார். அங்குள்ள அக்னியையும், கல்வெட்டுகளையும் பார்வையிட்ட ஜெய்சங்கர், இந்தியா - அஜர்பைஜான் நாடுகளின் உறவுக்கான சான்றாக இந்த கோயில் திகழ்வதாக எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அக் 25, 2026