மோடி மீதான காங்கிரஸ் வெறுப்பு இந்தியா வெறுப்பாக மாறிவிட்டது | Hindenburg Research | Adani | SEBI
இந்திய பங்குச் சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் சதி ரவிசங்கர் தாக்கு அதானி குழுமம் முறைகேடு செய்வதற்காக பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில் செபியின் தலைவர் மதாபி புரி புச் அவரது கணவர் பங்குகள் வாங்கி குவித்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது. இதனை அதானி குழும் மற்றும் செபி தலைவர் மாதபி புரி புச்சும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழுமத்தின் அனைத்து நிறுவன பங்குகளும் இன்று சரிவுடன் தொடங்கியுள்ளதால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பேசிய பாஜ எம்.பி ரவி சங்கர் பிரசாத், இந்திய பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ், இண்டியா கூட்டணி தலைவர் சதி செய்வதாக கூறினார். செபி தலைவருக்கு களங்கம் விளைவிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. ஹிண்டன்பர்க் அறிக்கையை சனிக்கிழமை வெளியிட வைத்து திங்களன்று பங்குச்சந்தையை சீர்குலைக்க சதி நடந்துள்ளது. இதனால் சிறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள். செபி அனுப்பிய நோட்டீசுக்கு ஹிண்டன்பர்க் இதுவரை பதில் தரவில்லை. மோடி மீதான காங்கிரசின் வெறுப்பு, இப்போது இந்தியா வெறுப்பாக மாறிவிட்டது.