/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நீட் விவகாரத்தை எதிர்கட்சி மீது தூக்கி போட்டு ஸ்டாலின் தடாலடி கேள்வி mkstalin| tn cm| admk palanisa
நீட் விவகாரத்தை எதிர்கட்சி மீது தூக்கி போட்டு ஸ்டாலின் தடாலடி கேள்வி mkstalin| tn cm| admk palanisa
தமிழக சட்டசபையில் நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது. பழனிசாமி பேசும்போது, காங்கிரஸ் திமுக ஆட்சியில்தான் நீட் அறிமுகம் செய்யப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக்கூறி ஆட்சியைபிடித்த திமுக அதை நிறைவேற்றியதா? யாரை ஏமாற்ற இந்த நாடகம்? என்று கேட்டார். பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், நீட் ரத்து செய்யவோம் என சொன்னது உண்மை. மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் அதை செய்திருப்போம். அந்த சிக்கலை தீர்க்க தற்போது அதிமுகவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது எனக்கூறினார்.
ஏப் 21, 2025