உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியை இந்திய ஆதரிக்கும் | Modi Speaks to Netanyahu | Israel | Hesbollah

அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியை இந்திய ஆதரிக்கும் | Modi Speaks to Netanyahu | Israel | Hesbollah

லெபனான் மீதான தாக்குதல் நெதன்யாகுவிடம் பேசிய மோடி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், இப்போது லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்தும் குண்டுகள் வீசி வருகிறது. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதுவரை வான்வழியாக தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் லெபனானுக்குள் தரைவழியாக புகுந்து தாக்க ஆயத்தமாகி உள்ளது. இச்சூழலில், பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் பெங்சமின் நெதன்யாஹுவிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலை குறித்து அவர் கேட்டறிந்தார். நமது உலகில் தீவிரவாதத்திற்கு இடமில்லை. பிராந்திய விரிவாக்கத்தை தடுப்பதும், பணையக்கைதிகள் அனைவரையும் பாதுகாப்பாக விடுவிப்பதை உறுதி செய்வதும் முக்கியம். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீக்கிரம் மீட்பெடுப்பதற்கான முயற்சிகளை ஆதரிப்பதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அக் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ