உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ராஜினாமா செய்தவருக்கு பதிலாக புதிய அமைச்சர் நியமனம் | Sai saravanakumar resigned | New minister appo

ராஜினாமா செய்தவருக்கு பதிலாக புதிய அமைச்சர் நியமனம் | Sai saravanakumar resigned | New minister appo

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜவை சேர்ந்த 2 பேரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக நமச்சிவாயம் உள்துறை அமைச்சராகவும், சாய் சரவணகுமார் ஆதிதிராவிட அமைச்சராகவும் இருந்து வந்தனர். திடீரென பாஜ தலைமை அறிவுறுத்தியதால் சாய் சரவணன் குமார் ஜூன் 27ல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவரது ராஜினாமா கடிதத்தை மத்திய அரசு ஏற்றுக்கெண்டுள்ளது. சாய் சரவணகுமாருக்கு பதிலாக தற்போது புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். காமராஜர் தொகுதி பாஜ எம்எல்ஏ ஜான்குமாரை அமைச்சராக மத்திய அரசு நியமித்துள்ளது. ஏற்கனவே அமைச்சராக இருந்த சாய் சரவணக்குமார் ஆதி திராவிட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. கூடுதலாக தீயணைப்பு துறையையும் கவனித்தார். இப்போது அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜான்குமார் சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர் என்பதால் இவர் பதவி ஏற்ற பிறகு தான் எந்த இலாகா ஒதுக்கப்படும் என்பது தெரியவரும்.

ஜூலை 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ