ஓட்டு வங்கிக்காக முஸ்லிம் மனதில் பயம் விதைக்கிறார்கள் Pm Modi| congress| Haryana election| maharastr
ஓட்டு வங்கிக்காக முஸ்லிம் மனதில் பயம் விதைக்கிறார்கள் Pm Modi| congress| Haryana election| maharastra மகாராஷ்டிராவில், மும்பை, நாசிக், அமராவதி, தானே உட்பட இடங்களில் அமைக்கப்பட்ட 10 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அத்துடன், 7,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் மோடி உரையாற்றும்போது, மகாராஷ்டிரா வரலாறு காணாத வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஹரியானாவில் 3வது முறையாக பாஜ தேர்வு செய்யப்பட்டு இருப்பது நாட்டின் மனநிலையை பிரதிபலிக்கிறது எனக்கூறினார். இந்து சமுதாயத்தை குறிவைத்து சாதி அடிப்படையிலான பிளவுகளை ஏற்படுத்த காங்கிரஸ் தந்திரம் செய்கிறது. இந்துக்களை பிரித்து அதன் மூலம் அரசியல் லாபம் அடைய நினைக்கிறார்கள். ஆனால், முஸ்லீம் சமூகத்தின் சாதி பிளவுகள் பற்றி அவர்கள் வாய் திறப்பது இல்லை. சமூகத்தை பிளவுபடுத்துவதற்கான சூத்திரங்களைதான் காங்கிரஸ் கொண்டிருக்கிறது. முஸ்லிம்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி அவர்களின் ஒட்டு வங்கியை பலப்படுத்தி கொள்வதுதான் காங்கிரசின் உத்தி. தலித்துகள் மத்தியில் பொய்களை பரப்ப காங்கிரஸ் முயன்றது. ஆனால் தலித் சமூகம் அவர்களின் ஆபத்தான நோக்கத்தை உணர்ந்து கொண்டது. தங்கள் இடஒதுக்கீட்டை பறித்து வாக்கு வங்கியை காங்கிரஸ் பிரிக்க விரும்புவதை தலித்துகள் புரிந்து கொண்டனர். காங்கிரஸ் பொறுப்பற்ற கட்சி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.