உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நேரு பாராட்டிய சில மணி நேரத்தில் ரோட்டில் மெகா பள்ளம் | K N Nehru

நேரு பாராட்டிய சில மணி நேரத்தில் ரோட்டில் மெகா பள்ளம் | K N Nehru

நேரு பாராட்டிய சில மணி நேரத்தில் ரோட்டில் மெகா பள்ளம் | K N Nehru காரைக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த ஒரு வருடத்துக்கு முன் செயல்பாட்டுக்கு வந்தது. நகரில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேவகோட்டை நெடுஞ்சாலை வழியாக ரஸ்தா சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. தேவகோட்டை ரோட்டில் குடிகாத்தான் கண்மாய் அருகே பாதாள சாக்கடை நுழைவு குழி இருந்தது. அந்த குழியுடன் குழாய்கள் சரியாக இணைக்கப்படாததால் நகரில் இருந்து வந்த கழிவுநீர் சாலைக்குள் கசிய தொடங்கியது. ஆனால் அதிகாரிகள் அதை கண்டுகொள்ளாத நிலையில் ரோட்டில் நடுவில் திடீரென மெகா பள்ளம் உண்டானது. இதனால் தேவகோட்டை நெடுஞ்சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. டூவீலர்கள் மட்டுமே பள்ளம் உண்டான பகுதியை சுற்றி செல்ல முடிகிறது. இப்போது அவசர அவசரமாக பள்ளத்தை சீரமைக்கும் பணி நடக்கிறது. பள்ளம் உண்டாவதற்கு சில மணி நேரத்துக்கு முன் காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடத்த விழாவில் அமைச்சர் நேரு கலந்து கொண்டார். தமிழகத்தில் காரைக்குடி மாநகராட்சியில் தான் பம்பிங் சிஸ்டம் இல்லாமல் பாதாள சாக்கடை திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என கூறி சென்றார். அன்று மாலையே தேவகோட்டை ரோட்டில் பாதாள சாக்கடை கழிவுநீர் அரிப்பால் மெகா பள்ளம் ஏற்பட்டது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

அக் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ